DSE - PG Fixation Proceedings - மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 8, 2024

DSE - PG Fixation Proceedings - மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்!



மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்!

01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்!

பார்வை (1)ல் காண் அரசாணை எண் 525 ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2023 - 2024 ஆம் ஆண்டில் 01.08.2023 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டது.

அதே போன்று நடப்பு கல்வியாண்டிலும் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பார்வை (2)ல் காண் அரசாணை 46ன்படி ஆசிரியர்கள் பாடவேளைகள் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாடவேளைகள் என வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள் என வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது.

பார்வை 4ல் காண் அரசாணை 217ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பிரிவுகளைப் பொறுத்தவரை 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும். Section bifurcation table ஏற்கனவே 11.08.2023 நாளிட்ட கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒவ்வொரு பாடத்தொகுதி/ பிரிவிற்கும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி/மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாடவேளைகள் கணக்கிடுதல் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது நிர்ணயம் செய்யும்போது ஓராசிரியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடத்தில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும்.

கூடுதல் தேவை பணியிடங்கள் மொழிப்பாடத்தில் 24பாடவேளைக்கும், முதன்மைப் பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம்.

ஆசிரியருடன் உபரி பணியிடங்கள் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் ஆசிரியருடன் உபரி பணியிடமாக இருக்குமாயின் இப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் இளையோரை (Station Junior) ஆசிரியருடன் உபரியாக காண்பிக்கப்படவேண்டும்.

பார்வை (5) ல் காண் அரசாணையில் ஒருமுறை பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்டவர்களை அடுத்த மூனறு கல்வியாண்டுகளுக்கு மீண்டும பணிநிரவல் செய்யக்கூடாது.

அவ்வாறான நிகழ்வுகள் எழும்போது சார்ந்த ஆசிரியர் பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும் பணிநிரவல் செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம். எனினும், சென்ற ஆண்டு ஆசிரியருடன் உபரியாக கண்டறியப்பட்டு பணிநிரவல் மூலம் தற்போதைய பள்ளியில் பணிபுரியும் மேற்காண் ஆசிரியர், இந்த ஆண்டில் தயார் செய்யப்படும் பணியாளர் நிர்ணயத்தின் போதும் ஆசிரியருடன் உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் அன்னாரை தற்போதைய பணியாளர் நிர்ணயத்தின்போது ஆசிரியருடன் உபரியாக காண்பிக்கப்படவேண்டும்.

மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01,08.2024 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்களின் எண்ணிகையின் அடிப்படையில் அனைத்து வகை அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் சார்பான பணியாளர் நிர்ணய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த பிரிவு உதவியாளர் மூலம் நேரில் உரிய பிரிவில் (W2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - PG Fixation Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.