Mutual Transfer - தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விதிமுறைகள் - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 8, 2024

Mutual Transfer - தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விதிமுறைகள் - Director Proceedings



மனமொத்த மாறுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அனுமதிக்கப்பட்டது . அதன்படி கலந்தாய்விற்கான காலஅட்டவணை பார்வை -3 ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அனுப்பப்பட்டது. தற்போது கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ( இடைநிலை ஆசிரியர் . பட்டதாரி ஆசிரியர் . தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ) ஒன்றியத்திற்குள் , கல்வி மாவட்டத்திற்குள் , வருவாய் மாவட்டத்திற்குள் , மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பங்களை 09.07.2024 முதல் 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்கவும் . ஒன்றித்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாவட்டக் கல்வி அலுவலராலும் ( தொடக்கக் கல்வி ) . வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களாலும் ( தொடக்கக் கல்வி ) விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் . மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் இருவரில் யாராவது ஒருவர் அவரது முழுத்தகவலுடன் மற்றொரு ஆசிரியரின் முழுத்தகவலினையும் சேர்த்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

பார்வை 1ல் காணும் அரசாணையில் பத்தி

(6) a. A teacher will be eligible for mutual transfer, only when he/she is having a minimum of two years of service left before retirement. b. Once a mutual transfer is obtained, the concerned teachers shall be eligible for mutual transfer only after 2 years of service in the given place.

தெரிவித்துள்ள மனமொத்த மாறுதலுக்கான அறிவுரைகளை பின்பற்றி நடக்குமாறு அனைத்து மாவட்டக் அலுவலர்களுக்கும்(தொடக்கக் தெரிவிக்கலாகிறது.

மனமொத்த மாறுதலுக்கான கலந்தாய்வு கால அட்டவணை பின்வருமாறு கல்வி)

1. ஒன்றித்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 01.08.2024 அன்று நடைபெறும்.

2. வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 02.08.2024 அன்று நடைபெறும்.

மேற்கண்ட விவரப்படி மனமொத்த மாறுதலுக்கான கலந்தாய்வினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD Mutual Transfer - DEE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.