ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் பணி - விருப்பமுள்ள நபர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 6, 2024

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் பணி - விருப்பமுள்ள நபர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் பணி - விருப்பமுள்ள நபர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! Job in the Governor's House Office - Director of School Education orders for details of interested persons!

ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மாறுதல் மூலம் நியமனம் - தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள நபர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! சென்னை 22, ராஜ்பவன், ஆளுநர் மாளிகை அலுவலகத்திலிருந்து 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களை மாறுதல் மூலம் (recruitment by transfer) நிரப்புவதற்கு தகுதியான பணியார்களின் பெயர்பட்டியலை, மேற்காண் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக, பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தகுதி வாய்ந்த / விருப்பம் உள்ள நபர்களின் பெயரினை தெரிவிக்குமாறு பார்வையில் காணும் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் இதர தகுதிகள் பின்வருமாறு:

(1) Minimum General Educational Qualification.

(2) Must have passed the Government Technical Examination in Typewriting by the Lower Grade in English.

(3) Willing candidates who are versatile in Computer operations.

மேற்படி பணியிடத்திற்கான ஊதிய விகிதம் நிலை-8. ரூ.19500 -62000/-.

எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த / விருப்பம் உள்ள பணியாளர்களிடமிருந்து கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் விருப்பக்கடிதங்களை பெற்று cosea4sec@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு கையொப்பமிட்ட கடிதத்தினை 07.06.2024க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD DSE - Raj Bhavan Jr. Asst Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.