பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 31, 2024

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!



பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!

அனுப்புநர்

Dr. மா. ஆர்த்தி. இ.ஆ.ப

மாநிலத் திட்ட இயக்குநர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

சென்னை-6

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

ந.க.எண்.1618/B1/ஒபக/2024.

நாள்.29.05.2024

- பொருள்: "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" நெறிமுறைகள்

பின்பற்றுதல் - தொடர்பாக.

பார்வை:

அரசாணை(நிலை) 6T 60OT.72.

பள்ளிக் கல்வித் துறை (அகஇ2).நாள்:11.03.2024

பார்வையில் கண்டுள்ள அரசாணையில் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" மேற்கொள்ளும் பணிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 770 ஆதார் கருவிகளைக் கொண்டு புதிய ஆதார் பதிவு. புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தரவு உள்ளீட்டாளர்களை நியமித்துள்ளது.

தரவு உள்ளீட்டாளர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி வழங்கப்பட்டு. எதிர்வரும் 2024 ஜுன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, பள்ளிகளில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள ஆயத்த நிலையில் உள்ளனர். இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி). மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் அடங்கிய குழு. தங்களது மாவட்டத்திலுள்ள வட்டாரங்களில் இப்பணியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியப் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினை ஏற்படுத்தி, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செய்ய அறிவுறுத்தல் வேண்டும்.

ஆதார் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய குழந்தைகளுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படும். 8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி இச்சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளிகளுக்குத் தெரிவித்திடல் வேண்டும். ஜுன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளன்று தங்களது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைக் கொண்டு இப்பணியினைத் துவக்கிட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும். இதுசார்ந்து வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இப்பணியில் எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நகல்:

மாநிலத் திட்ட இயக்குநர்

1. அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை - 9

2. மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்ன

ை 3. பள்ளிக் கல்வி இயக்குநர். சென்னை - 6

4. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை - 6

5. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை

6 (மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) தகவல் அளிக்கும்பொருட்டு) CLICK HERE TO DOWNLOAD SPD Instructions - Aadhar - Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.