பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஏப்ரல் 8) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 أبريل 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஏப்ரல் 8) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

ஏப்ரல் 8ம் தேதி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலையில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 9ம் தேதி வரை நடைப்பெறும் பங்குனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வரும் ஏப்ரல் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் எனவும் வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு அவற்றுக்குப் பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டியே அறிவித்தபடி நடைபெறும். அத்தியாவசிய பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் விடுமுறை நாளான 8-ம் தேதி திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.