அரசு பள்ளிகளுக்கு ரூ.63 கோடி தொகை நிதி விடுவிப்பு – பள்ளிக்கல்விதுறையின் அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

அரசு பள்ளிகளுக்கு ரூ.63 கோடி தொகை நிதி விடுவிப்பு – பள்ளிக்கல்விதுறையின் அறிவுறுத்தல்



அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கும் 2-ஆம் கட்ட பள்ளி மானியத் தொகை விடுவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Phase 2 School Grant Waiver for All Category Government Schools – Procedures of Director of School Education

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை ( Composit School Grant /Sim for Tablet -june -24) இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது. பார்வை 3 ல் காணும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி 50 சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது . தற்போது பார்வை 4 ல் காணும் சென்னை -6 , மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீத பள்ளி மானிய தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் ரூ 632072500 ( ரூபாய் அறுபத்து மூன்று கோடியே இருபது இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும் ) பள்ளிக் கல்வி இயக்குநருக்கு விடுவிக்கப்பட்டு , மானியத் தொகை பள்ளிக் கல்வி இயக்குநரின் வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது . எனவே பார்வை 4 ல் காணும் மேற்காண் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீதம் பள்ளி மானிய தொகையினை இணைப்பில் கண்டவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் ( Fund Transfer ) செய்திட பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக அலுவலருக்கு ஆணை வழங்கப்படுகிறது.

இந்நிதியினை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet- க்கு தேவையான SIM- ற்கான ஜுன்'24 மாதத்திற்கான தொகையினை மட்டும் ( Rs.110 / -per Teacher ) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளவும் , பள்ளி மானியத் தொகையினை பார்வை 3 ல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கூறிய முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் நிதியினை பயன்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு : பணப்பரிமாற்ற வங்கி எண் விவரப் பட்டியல்

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.