இன்று காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 29, 2024

இன்று காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி



30.01.2024 - காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -600006.

ந.க.எண்.002745/இ/இ1/2024,

நாள் 24.01.2024

திருவள்ளுவராண்டு- 2054 சோபகிருது வருடம் தை திங்கள் 10ஆம் நாள்

பொருள்

பள்ளிக் கல்வி -

உறுதிமொழி தீண்டாமையை ஒழிக்க 30.01.2024 அன்று உறுதிமொழி மேற்கொள்ளக் கோருதல் - தொடர்பாக.

பார்வை அரசு கடித எண். efile.567/GL1(2)/2024-1,

பள்ளிக்கல்வித்துறை, நாள்.19.01.2024.

*****

(நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இணைப்பு – கடிதம் மற்றும் உறுதிமொழி

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.

(மின்னஞ்சல் வழியாக) School Education Department Secretariat, Chennai-9.

Letter No.efile.567/GL1(2)/2024-1, dated 19.01.2024

Tmt. K. Jeyalalitha, B.Sc.,

Deputy Secretary to Government.



The Director of School Education, Chennai-6.(w.e.) The Director of Elementary Education, Chennai-6. (w.e.) The Director of Private Schools, Chennai-6 (w.e.) The State Project Director, Samagra Shiksha, Chennai-6. (we The Chairman, Teachers Recruitment Board, Chennai-6. (w.e.) The Director of State Council of Educational Research

and Training, Chennai-6. (w.e.)

2 2 JAN 2024

செள்கை.

The Director of Government Examinations, Chennai-6. (w.e.) The Director of Non-Formal and Adult Education, Chennai-6. (w.e.) The Managing Director, Tamil Nadu Text Book and Educational Services Corporation, Chennai-6.(w.e.) The Director of Public Libraries, Chennai-2.(w.e.) Sir/Madam,

Sub:

Ref:

- School Education Observance of silence on 30th January (Martyrs' Day) in the memory of those who sacrificed their lives during struggle for India's freedom and administering a Pledge against Untouchability Intimation Regarding.

From the Deputy Secretary to Government, Public Department, Letter No. 74/Genl-1/ 2024-4, dated 12.01.2024. I am directed to enclose a copy of the reference cited and request you to issue necessary instructions to the officials and staff under your control to make arrangements to administer observance of two minutes silence from 11:00 AM to 11:02 A.M followed by administering a Pledge against Untouchability on 30.01.2024. The Tamil version of the pledge is enclosed herewith.



CLICK HERE TO DOWNLOAD தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.