மழையின் காரணமாக பள்ளிக்கு அளிக்கப்படும் விடுமுறையை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்க வேண்டுதல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 نوفمبر 2023

மழையின் காரணமாக பள்ளிக்கு அளிக்கப்படும் விடுமுறையை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்க வேண்டுதல்



மழையின் காரணமாக பள்ளிக்கு அளிக்கப்படும் விடுமுறையை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்க வேண்டுதல்

மதிப்புமிகு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்படுவது எப்பொழுதும் உள்ள நடைமுறை. விடுமுறை விடப்படுவதற்கான முக்கிய காரணம் மாணவர்கள் மழையில் நனைந்து அதை த்தொடர்ந்து வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுக்காமல் இருப்பதற்காகவும் தான்.

தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்தால் மாவட்டம் முழுவதும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.

இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.