தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
பாதுகாப்பு
TAMIZHAGA GRADUATE TEACHERS ASSOCIATION
பெறுநர்,
மதிப்புமிகு. பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்கள், தலைமை செயலகம், ख.09
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்பாக....
1. 01.07.2004 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு ஏறக்குறைய 19 ஆண்டு காலம் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை அதன் பின்பு ஆசிரியர் TRB மூலம் பணியேற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி விதிமுறைகள் வகுப்பட்டுள்ளது. எனவே நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி விதியினை உருவாக்க கேட்டுக்கொள்கிறோம்
2. புதிய பணி விதியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடுநிலைப்பள்ளியில் பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
3. தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை பட்டியல் விரைவில் தயார் செய்து பொதுமாறுதல் கலந்தாய்வை நடந்த வேண்டும் என்று கேட்கொள்கிறோம்


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.