TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 11, 2023

TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு



TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு

அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7; மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என, மொத்தம், 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.