9 & 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவில் நவம்பர் மாத CRC பயிற்சி 27.11.2023, 28.112023, 29.11.2023 - ஆசிரியர்களை பணிவிடுவிக்க கோருதல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 22, 2023

9 & 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவில் நவம்பர் மாத CRC பயிற்சி 27.11.2023, 28.112023, 29.11.2023 - ஆசிரியர்களை பணிவிடுவிக்க கோருதல் சார்பு

9 & 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவில் நவம்பர் மாத CRC பயிற்சி 27.11.2023, 28.112023, 29.11.2023 - ஆசிரியர்களை பணிவிடுவிக்க கோருதல் சார்பு

தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 9 & 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவில் நவம்பர் மாத CRC பயிற்சி 27.11.2023, 28.112023, 29.11.2023 ஆகிய தேதிகளில் வட்டார அளவில் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள CRC மையங்களில் நடைபெறுதல் ஆசிரியர்களை பணிவிடுவிக்க கோருதல் சார்பு.

பார்வை:

சென்னை 06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.000523/எஃப்4/2023, நாள்.08.11.2023

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேற்காண் பொருள் சார்பாக, பார்வையில் காண் செயல்முறைகளின்படி, 9 & 10 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத CRC பயிற்சி வட்டார அளவில் 27.11.2023, 28112023, 29:112023 ஆகிய தேதிகளில் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள CRC மையங்களில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.

ஒன்றிய அளவிலான பயிற்சி

எனவே, இப்பயிற்சிகளில் பங்குபெறவுள்ள இத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலிலுள்ள ஒன்றிய கருத்தாளர்களையும் மற்றும் 9 & 10 ஆம் வகுப்புகளை கையாளும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த பாட / நாட்களில் நடைபெறவுள்ள பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு பணிவிடுவிப்பு செய்ய சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.