முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் - செய்தி வெளியீடு 21.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 21, 2023

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் - செய்தி வெளியீடு 21.11.2023

Incentive Scheme for Full Time Doctoral (Ph.D) Students - Press Release 21.11.2023 - முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் - செய்தி வெளியீடு 21.11.2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ( Ph.D ) பயிலும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.



திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள் , " இயக்குநர் , ஆதிதிராவிடர் நல , இயக்குநரகம் , எழிலகம் ( இணைப்பு ) , சேப்பாக்கம் , சென்னை -600 005 " என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும் . மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது .

CLICK HERE TO DOWNLOAD செய்தி வெளியீடு 21.11.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.