Competitions for School Students at District Level - November 2023 - Director of School Education orders - வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் வழங்குதல் - சார்பு- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

Competitions for School Students at District Level - November 2023 - Director of School Education orders - வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் வழங்குதல் - சார்பு- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Conduct of Competitions for School Students at District Level - November 2023 - Director of School Education orders giving topics for competitions = பள்ளிக் கல்வி துறை - மன்ற செயல்பாடுகள் 2023-24 - வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் வழங்குதல் - சார்பு- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஒவ்வோரு மாதமும் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் நடத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டாரம். மாவட்டம் அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து பார்வை-(1)ல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் -2023, அக்டோபர்-2023 மற்றும் நவம்பர்-2023 ஆகிய மாதங்களில் பள்ளி அளவில் நடைபெறும் 10 போட்டிகளில் வெற்றி பெறும் 30 மாணவர்கள். நவம்பர் மாதத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர். பார்வை-2ல் குறிப்பிட்டுள்ளபடி வட்டார அளவிலான போட்டிகளை நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடத்திட தெரிவிக்கப்படுகிறது. மேலும் வட்டார அளவிலான போட்டிகளுக்கு இணைப்பு-1இல் குறிபிட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை மாணவர்கள் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் அல்லது தமிழ் மொழியில் போட்டிகளில் பங்கேற்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள், வட்டார அளவிலான போட்டிகளை நடத்தி EMIS இணையதளத்தில் 04.12.2023 தேதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.