CRC பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 22, 2023

CRC பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings

வாக்காளர் சேர்க்கை முகாம் காரணமாக 1- 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC தேதி 02-12-2023 ஆக மாற்றம்... SCERT இயக்குநர் அறிவிப்பு..

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் (CRC) பயிற்சியானது நவம்பர் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் 25.11.2023 அன்று நடத்திட பார்வை 3-ல் காண் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டது.

தற்போது, பார்வை 4-ல் காண் கூட்டமவர்வின் போது 25.11.2023 அன்று மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணிக்கு செல்வ வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படுகிறது. பயிற்சிக்கான உரிய செலவினங்களை அரசு விதிகளின்படி மேற்கொண்டு அதன் அசல் பற்றுச் சீட்டுகளை தணிக்கைக்கு உட்படுத்தும் வகையில் தயார் நிலையில் தங்கள் மாவட்ட அலுவலகத்திலேயே இருத்தி வைத்து, பணிமனை முடிந்த பின்னர் செலவினத் தொகை மீதம் இருப்பு போன்ற விவரத்துடன் பயனீட்டுச் சான்றினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தேத் தொகையினை இந்நிறுவன IOB aad 142301000013540. IFSC Code: DBA0001423 5 செலுத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பங்கேற்பாளர்களை உரிய நாட்களில் பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் வகுப்பிற்கான பாடநூல் மற்றும் கையேட்டினை எடுத்து வர அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.