அரசு பள்ளிகளில் உயர்கல்வி தகுதியுடன் NET, SLET தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களில் நியமிக்க TAMS கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 أكتوبر 2023

அரசு பள்ளிகளில் உயர்கல்வி தகுதியுடன் NET, SLET தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களில் நியமிக்க TAMS கோரிக்கை!



அரசு பள்ளிகளில் உயர்கல்வி தகுதியுடன் NET, SLET தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களில் நியமிக்க TAMS கோரிக்கை!

TAMS-request-to-promote-NET-Exam-passers-as-lecturers-in-colleges! - NET Exam முடித்தவர்களுக்கு கல்லூரிகளில் விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்க TAMS கோரிக்கை!

எங்களின் பல்வேறு கோரிக்கைகள் தங்களின் கனிவான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

1. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை விரைவில் வழங்கிட வேண்டும். 3. உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தினை மீண்டும் பழைய முறைப்படியே வழங்கிட வேண்டும்.

4. 10-03-2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதை விரைந்து வழங்க வேண்டும்.

5. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

6. 2004 - 2006 தொகுப்பூதியத்தில் பணியாற்றி இதுவரை கொள்ளப்படாமல் உள்ள தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கில் அறிவிக்க வேண்டும்.

7. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கட்டாயக்கல்வி சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே. ஆனால் நீதிமன்றங்களின் தலையீட்டால் பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வு தேவை என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை என்று அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் விரைவில் பதவி உயர்வில் செல்ல வழிவகை செய்தல் வேண்டும். 8. EMIS, இணையதளம், பிற செயலிகள் பயன்பாடுகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவதிலிருந்து (ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு தவிர்த்து) விடுவிக்க வேண்டும்.

9. பள்ளிக்கல்வித்துறையில் உள்ளது போல தொடக்கக்கல்வித் துறைக்கும் பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பணியிடத்தில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

10. தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் 50 சதவீதத்தினை பதவி உயர்வு வாய்ப்பாக வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

11. ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தினை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

12. ஆசிரியர்கள் உயர்கல்வி படித்து அதற்கான பின் அனுமதிக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய பின் அனுமதி விரைந்து வழங்கிட வேண்டும்.

13. ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் நலன் கருதி அரசாணை எண் 149ஐ ரத்து செய்து விரைவில் மாற்று முறைகளை ஆய்வு செய்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 14. CRC பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

15. பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தினை ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடத்த வேண்டும்.

16. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அளிக்கப்படும் மருத்துவச் செலவினங்கள் அனைத்தையும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களே ஏற்க வழிவகை செய்யவேண்டும்.

17. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

18. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

19. பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பாடங்களுக்கும் 10 மதிப்பெண் அக மதிப்பெண்ணாக (Internal Marks) வழங்கிட வேண்டும்.

20. அரசு பள்ளிகளில் உயர்கல்வி தகுதியுடன் NET, SLET தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசு கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களில் நியமிக்க புதிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

هناك 6 تعليقات:

  1. முதலில் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10% முதுகலை ஆசிரியர் வழங்கிட கோரிக்கை வைத்து பதவி உயர்வு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்

    அதை விடுத்து துறை விட்டு அடுத்த துறைய்யில் பேராசிரியர் பதவி உயர்வு கோரிக்கை வைத்து ஆசை காட்டுவது இருக்கட்டும்

    ردحذف
  2. Tams தியாகராஜன் அவர்கள்
    எல்லா கோரிக்கைளையும்
    நிறைவேற்றி விட்டார்
    இப்பொழுது
    அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்வி முடித்து விட்டு NET SLET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு கல்லூரியில் பேராசிரியர்
    பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

    இது போன்ற தலைவர்களை நாங்கள் வாழ்க்கையில் பார்க்கவே
    இல்லை 🙏


    வேதனை🙏

    ردحذف
  3. இப்போதைக்கு மிக முக்கியமான கோரிக்கை

    ردحذف
  4. ஒரு கோரிக்கை கூட நிறைவேறவில்லை.

    ردحذف
  5. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு அவர்கள் போராடிப் பெற்றது.அடுத்தவர் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைக்க வேண்டாம்.

    ردحذف
  6. அதை கூட உடனடியாக பெற்றுத்தர முடியவில்லை.

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.