டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 أكتوبر 2023

டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்



டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்:

1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு அமைத்தல், அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்தல்.

2. EMIS பதிவுகள் 01.11.2023 முதல் ஆசிரியர்களுக்கு பதில், BRTE க்கள் மேற் கொள்வார்கள்.

3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் இராது.

4. SMC கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டினால் போதும். 5. உயர்கல்வி பயின்ற 4500 பேருக்கு பின்னேற்பு வழங்குதல்.

6. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்.

7. B.Lit., B.Ed., படித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்.

8. DEO - Ele அலுவலகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு DI ஆக பணி மாற்றம் அளித்தல். 9. பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவதை தவிர்த்தல். கால அவகாசம் 3 மாதம்.

10. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிவர்த்தி செய்தல்.

மேற்கண்ட தகவல்கள் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக செய்தியில் அளித்த தகவல்களின் அடிப்படையில் பகிரப் படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.