பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல சிறப்பாசிரியர்களுக்கு (PET, Music, Craft & Tailor Teacher) வாய்ப்பு - GC துணை ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 9, 2023

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல சிறப்பாசிரியர்களுக்கு (PET, Music, Craft & Tailor Teacher) வாய்ப்பு - GC துணை ஆணையரின் செயல்முறைகள்!



Opportunity for Specialist Teachers (PET, Music, Craft & Tailor Teacher) to move from School Education Department to Schools under Chennai Corporation Department - GC Deputy Commissioner's Procedures! பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல சிறப்பாசிரியர்களுக்கு (PET, Music, Craft & Tailor Teacher) வாய்ப்பு - GC துணை ஆணையரின் செயல்முறைகள்!

பணியமைப்பு பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை - பெருநகர சென்னை மாநகராட்சி - சிறப்பாசிரியர்(உடற்கல்வி ஆசிரியர், Music Teacher, Craft Teacher, Tailor Teacher) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள 139 பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடத்தில் அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் - கலந்தாய்வு மூலம் பங்கேற்க விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மைம முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ளஅறிவுறுத்தல்-தொடர்பாக. பார்வை

1.அரசாணை நிலை எண்.48. பள்ளிக்கல்வித் பக5(2) துறை, நாள்: 01.03.2023

2 அரசாணை (நிலை) எண்.176.பள்ளிக்கல்வி (பக5(1) துறை நாள்:17.12.2021

3.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.6. நாள்: 26.06.2023

பார்வைல் கண்டுள்ளபடி, அரசாணை (நிலை) எண்.48, பள்ளிக்கல்வித் பக5(2) துறை. நாள்: 01.03.2023. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்கள், தன் விருப்பத்தின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநராட்சிக்கு ஈர்த்துக் கொள்ளப்படுவர் அல்லது அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்திலேயே பணியை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணையில் தெரிவித்துள்ளவாறு, புதிதாக இணைக்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் பணிபுரியும் 990 ஆசிரியர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து பணியுரிய விருப்பம் தெரிவித்து, பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். மற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்கள் தாய்துறையான பள்ளிக்கல்வித்துறை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழே பணிபுரிந்து வருவதால், தற்போது சிறப்பாசிரியர் பணியிடங்கள்(உடற்கல்வி ஆசிரியர், Music Teacher Craft Teacher, Tailoring Teacher) பணியிடங்கள் காலியாகவுள்ளது- இக்காலியாக உள்ள பணியிடங்களால். மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது இச்சூழ்நிலையினை கருத்தில் கொண்டு. இக்காலிப்பணியிடங்களில் சென்னை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியிட மாறுதல் பெற விருப்பம் உள்ள, சிறப்பாசிரியர்(உடற்கல்வி ஆசிரியர். Music Teacher, Craft Teacher, Tailoring Teacher) ஆகியோருக்கு, EMIS (இணையதளம்) வாயிலாக, பார்வை-2 மற்றும் 3ல் கண்டுள்ள, அரசாணை எண். 176, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 17.12.2023 மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6. ந.க.எண்.21243/சி3/இ1/2023, நாள்: 26.06.2023-ன்படி தெரிவித்துள்ள வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின்படியே, Unit Transfer கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதன் அடிப்படையில், சென்னை மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்திலுள்ள சிறப்பாசிரியர்(உடற்கல்வி ஆசிரியர். Music Teacher. Craft Teacher. Tailoring Teacher) ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆசிரியர்களின். விண்ணப்பங்கள் 05:10.2023 முதல் 08:102023 நாளில், EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கலந்தாய்வு மூலம் தங்களுக்கு தேவையான பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள நடைமுறை உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே. அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்திலில் உள்ள ஆசிரியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆசிரியர்கள், EMIS இணையதள வாயிலாக 05:10.2023 முதல் 08.10.2023 நாட்களுக்குள். தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து 1110.2023 அன்று மாலை 4.00 to 5.00 மணியளவில், சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை, கூட்டு அரங்கம், சென்னை.03ல் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளுமாறும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையால் வழங்கப்படும் தடையின்மைச் சான்றிதழுடன் கலந்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.