தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம்: அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைப்பு
தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசுக்கு ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை:
CLICK HERE TO DOWNLOAD PDF உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓர் அலகு என்று இருக்கிறது. இதை மாவட்ட அல்லது மாநில முன்னுரிமையாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அளிப்பதற்காக தனிக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி செயல்படுவார். அதன் உறுப்பினர்களாக தொடக்கக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் இருப்பார்கள். இந்தக் குழு தமது அறிக்கையை 3 மாத காலத்துக்குள் அரசிடம் சமர்பிக்க வேண்டும். இந்தக் குழுவின் பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை தொடக்கக் கல்வி இயக்குநர் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.