30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 10, 2023

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி!



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி!

*பேரணியில் பங்கேற்க தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினமே ஆழிப் பேரலையாய் அணி திரண்டு வாரீர்!*

*வங்கக் கடலை தோற்கடிக்கும் சங்கக்கூட்டம் இதுவென சிங்கக் கூட்டமாய் சிலிர்த்தெழுந்து வாரீர்!*

*போர்க்குணமிக்க இயக்கத்தின் போராட்டக்களம் நோக்கிப் புயலென புறப்பட்டு புதிய வரலாறு படைத்திட வாரீர்!*



*பத்தாயிரம் பேர் பங்கேற்கும் வரலாற்று நிகழ்வில் தடம் பதித்து இடம் பிடிக்க தன்னெழுச்சியுடன் வாரீர்!*

*போராடும் இயக்கத்தின் போராட்டக் களத்தை கூர்மையாக்கிட வீறு கொண்டெழுந்து விண்ணதிர வாரீர்!


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு

29.09.2023

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை கோட்டை நோக்கி பேரணி

பேரன்பு மிக்க நம் பேரியக்கத் தோழர்களே !

வணக்கம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 20.08.2023 அன்று திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன். சமூக நலன் சார்ந்த கீழ்க்கண்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று காலை 11 மணிக்கு பத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பிருந்து தலைமைச் செயலகத்திற்கு பேரணியாக சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்பேரணியில் ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கோரிக்கைகள்:

1.தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 31.12.2005 வரை பெற்று வந்த மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2008 முதல் தமிழக அரசால் பறிக்கப்பட்டது. மேலும் 01.06.2009 முதல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 01.06.2009க்கு முன்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்திற்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கை விரைவாக பெறப்பட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் முரண்பாடுகள் உடனடியாக களையப்பட வேண்டும். பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்,

3. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 02.06.2023 அன்று வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும். தலைமை ஆசிரியர். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து (Policy Decission)

பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு என்பதை நிலை நிறுத்த வேண்டும்.

4, தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காலைச் சிற்றுண்டித் திட்டம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் தனி இட ஒதுக்கீடு, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

5. மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வேண்டும். 6. தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 8 வகுப்புகள் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையில் EMIS செயலியில் பல்வேறு பதிவேற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனார். கல்விப் பணியைத் தவிர பிற பணிகளில் குறிப்பாக EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும். CRC பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால் கற்றல், கற்பித்தல்

7.

பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

8. தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்திற்குக் கொண்டுவரப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலத்தை நியமன நாள்முதல் காலமுறை ஊதியப் பணிக்காலமாகக் கருதி பணி வரண்முறை செய்திட வேண்டும்.

9. (அ) பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டுவதால் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக் கூட்ட வேண்டும்." (ஆவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிப்பதைக் கைவிட வேண்டும்.

10. தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் உயர் கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி ஆணை கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பின்னேற்பு அனுமதி ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.

11. காலங்காலமாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையைக் கொரோனாவைக் காரணம் காட்டி கடந்த அரசு இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது. ஆனால், இன்றைய அரசும் காரணமின்றி அதை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது. பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலம் முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் பறிக்சுப்பட்டது. தற்போதைய அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மாறாக உயர்கல்விக்கு ஊக்கத்தொகை என அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு முன்பு போல் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும். 10.03.2020 க்கு முன்னர் உயர்க்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு அனுமதித்து நிலுவைத்தொகையினை அரசாணைப்படி உடன் வழங்க வேண்டும்.

13. தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு முடிக்காமல் 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் பெற்ற 1500 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து தவிர்ப்பு வழங்கி நியமன ஒப்புதல் வழங்கவும். ஒப்புதல் வழங்கிய சில ஆசிரியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள ஊதியத்தை உடனடியாக மீண்டும் வழங்கிடவும் வேண்டும்.

14. அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்குதொடர் அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யும்போது நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP - APPROVAL) அங்கீகாரம் பெற வேண்டும் என்று கல்வித்துறை கோருவதைக் கைவிட வேண்டும்.

15, தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் இன்றைய பணிச்சூழலைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

16. அரசுபள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஏற்பட்டுள்ள தேவைப் பணியிடங்களில் மாணவர்களின் சுல்வி நலன் கருதி உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்.

17. கடந்த ஊதியக் குழுக்களில் தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சிறப்புப் படிகள் அனைத்தும் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பான தணிக்கைத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

18, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசாணைகளின்படி முழுக் கட்டணத்தையும் அளிக்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டணமில்லா சிகிச்சையை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

19. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும், ஆசிரியர் பணி நியமனத்திற்கு பல போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149 ஐ ரத்து செய்திட வேண்டும்.

20. ஆசிரியர்களின் அன்றாடக் கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையில் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணியிலிருந்து மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். 21. நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த 2381 அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புக்களைக் கையாள முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்திட வேண்டும். 22. ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்விக்கான முன் அனுமதி பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்று காரணம் கூறி 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பே உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற்றும், 10 அல்லது 15 ஆண்டுகளாக முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆசிரியர்களை சில வட்டாரக்கல்வி அலுவலர்கள் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் காரணமாக திட்டமிட்டே 01.01.2023 பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மாநில தொடக்கக்கல்வித்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, பணிப்பதிவேட்டில் பதிவு செய்யாதது அலுவலகத் தவறு என்பதைக் கணக்கில் கொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய நீதி கிடைக்க ஆவன செய்திட வேண்டும்.

23. அரசாணை நிலை எண்: 23 நிதி ஊதியப் பிரிஷ் துறை நாள்: 12.01.2011 தமிழ்நாடு அரசின் நிதித்துறைக் கடிதம் என்: 14483/CMPC/20111 நாள்: 05.01.2012 மற்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 13944/C2/2019, நாள்: 21.11.2019 ஆகியவற்றின்படி ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தேர்வுநிலைக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.5400 தர ஊதியம் என்பது சரியானதாகும். ஆனால், சிறப்பு மற்றும் மண்டலத் தணிக்கைகளில் தணிக்கையாளர்கள் மேற்கண்டவாறு தேர்வுநிலைக்கு ரூ.5400 அனுமதிக்கப்பட்டதற்கு தணிக்கைத் தடை விதித்துள்ளனர். இவ்வாறான தணிக்கைத் தடைகள் முற்றிலும் அரசாணைகளுக்கு முரணானதாகும். எனவே, இத்தணிக்கைத் தடைகளை விலக்கிக் கொள்ள பொதுவான ஆணையொன்றை வெளியிட வேண்டும்.

24, தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து வகையான ஆசிரியர் பணியிடங்களையும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பாமல், காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட தமிழ்நாடு அரசு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

25. B.Ltபட்டம் பெற்று நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட்சுல்வித் தகுதிக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்குவதோடு, ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளை நீக்கி ஆணையிட வேண்டும்.

26. தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 27. மாநில கல்விக்கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

28. மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் தரமானவையாக உள்ளன. ஆனால் சீருடைகள், புத்தகப்பை, காலணி ஆகியவை தரம் குறைந்தவையாக உள்ளன. அவற்றைத் தரமாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

29, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலைச் சிற்றுண்டித் திட்டத்தில் காலைச் சிற்றுண்டியைத் தயாரிக்கும் பணியை அந்தந்தப் பள்ளிகளின் சத்துணவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடர்பான பொறுப்புக்களிலிருந்து பள்ளியின் கல்வி நலன் கருதி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை விடுவித்திடவும் வேண்டும்.

30. இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் ஊதிய நிலை (LEVEL) 10 ல் தளம் (CELL) 45 ஐ ஒரு சில ஆசிரியர்கள் எட்டி விட்டதால் தமிழக நிதித்துறை எல்லா நிலைகளிலும் (LEVEL) உள்ள தளங்களை (CELL) 50 வரை உயர்த்த வேண்டும்.

போராட்ட அறைகூவல் விடுக்கும்....

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில அமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.