பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 30, 2023

பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது.

அதில், பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும்,

9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு…

19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
21ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி உடற்கல்வி,
25ம் தேதி கணக்கு,
26ம் தேதி அறிவியல்,
27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்

பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள்
19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி கணக்கு,
25ம் தேதி அறிவியல், 26ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - செப்.15 முதல் 27 வரை நடைபெறும்



தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகிஉள்ளது.

அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக வினாத்தாள்கள்: இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மாநிலவாரியாக தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலாண்டு தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணையில் கணிதம், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களுக்குத் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, அந்த தேர்வுகளை ஒருநாள் தள்ளி செப்.23-ம் தேதி நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.