அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக 697 பேருக்கு பதவி உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 20 أغسطس 2023

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக 697 பேருக்கு பதவி உயர்வு



அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களாக 697 பேருக்கு பதவி உயா்வு

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளாக 742 தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை பதவி உயா்வு மூலம் நிரப்புவதற்கு முடிவானது. இதையடுத்து கடந்த ஜன.1-ஆம் தேதி நிலவரப்படி பதவி உயா்வுக்கு தகுதியான 1,016 போ் கொண்ட உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இவா்களுக்கான கலந்தாய்வு ‘எமிஸ்’ தளம் வழியாக ஆக.18 முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) வரை நடைபெற்றது.

கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 819 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. மற்ற 112 போ் பதவி உயா்வுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும்.

மற்றொருபுறம், பல முதுநிலை ஆசிரியா்கள் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதனால் ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.