MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் ஆக. 28ம் தேதி வரை நடைபெறுகிறது.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 20 أغسطس 2023

MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் ஆக. 28ம் தேதி வரை நடைபெறுகிறது..

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று முதல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு

சென்னை, ஆக.20: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கி ழமை (ஆக. 21) தொடங்குகிறது.

முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக் கீட்டில் 119 எம்பிபிஎஸ், 85 பிடிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்பிபிஎஸ், 818 பிடி எஸ் இடங்களும் காலியாக உள்ளன. இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக தேர்வுக் குழு வெளியிட்டது.

அதன்படி, இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதி யானவர்கள், திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnhe alth.tn.gov.in மற்றும் www.tnmedicalsele ction.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய் யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 24-ஆம் தேதி காலை 10 முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆக. 29, 30-ஆம் தேதிகளில் தர வரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்ந்து, வரும் 31-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்க ளில் வெளியிடப்படும். செப்.1 முதல் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவி றக்கம் செய்து கொள்ளலாம்.

செப்.4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித் துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.