அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 16 أغسطس 2023

அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை கடந்த 14ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை சார்ந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் என்ற இணையதளத்தில் மாணாக்கர்கள் விவரங்களை www.tngasa.in “TNGASA 2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.