மத்திய அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 27 يوليو 2023

மத்திய அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Under the scheme announced by the central government, students can apply for scholarship - மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்கீழ் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத் தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மர பின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரிகல்வி உதவித்தொகைதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3093 மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த மாணவ, மாணவிகள் https://yet.nta.ac.in</a>. என்ற இணையதளத்தில் பட் டியலிடப்பட்டபள்ளிகளில் 9 அல்லது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேசி யதேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு வருகிற 10-ந் தேதிக்குள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்து தேர்வு ஓ.எம்.ஆர். முறையில் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடத்தப்படும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.