தொலைநிலை, இணையவழியில் எம்பிஏ படிப்புக்கு அனுமதி - Admission to distance, online MBA course
எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்தலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை ஏற்று, கடந்த மே 20-ம் தேதி இணைய வழியில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பு வசதிகளை ஏஐசிடிஇ ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் மூலம் அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக கருதி, எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்துவதற்கு 2023-24 முதல் 2027-28 வரை 5 ஆண்டு காலத்துக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.