33 நாள் முன்னதாகவே ஓய்வு தேதி : அரசு உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 18, 2023

33 நாள் முன்னதாகவே ஓய்வு தேதி : அரசு உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி



33 நாள் முன்னதாகவே ஓய்வு தேதி அரசு உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி... - Teachers are unhappy with the govt order of 33 days earlier rest date...

ஓய்வுபெற உள்ள ஆசிரியர்களை ஏப் . 28 ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி

ஓய்வுபெற உள்ள ஆசிரியர்களை, வரும் 28ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு அலுவலர்கள், ஊழியர்கள், 60 வயதில் ஓய்வு பெறுகின்றனர். இதில், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மட்டும், கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை பணியாற்ற அனுமதி தரப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ள ஆசிரியர்களை, வரும் 28ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மட்டுமே, வரும் 28ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, விடுமுறை விடப்படுகிறது. இது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கான கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள், மே 31ம் தேதி.

அதுவரை நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி கட்ட பணிகள் மற்றும் புதிய கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகளை, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர். தற்போதைய நிலையில், முதுநிலை ஆசிரியர்களுக்கு, பள்ளி வேலை நாள் முடிந்தாலும், 'நீட்' தேர்வு பயிற்சி திட்டத்தில் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் நுழைவு தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையெல்லாம் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள அதே நாளில், ஆசிரியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிடுவது, பல ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

CLICK HERE TO DOWNLOAD 33 நாள் முன்னதாகவே ஓய்வு தேதி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.