ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 15 مارس 2023

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12,000-ல் இருந்து ரூ. 18,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 10,000-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 7,500-ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அரசு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் உண்டி உறைவிட தொடக்க / நடுநிலை / உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்குதல் தொடர்பாக

2 பார்வை 1இல் காணும் அரசாணையில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் மாதாந்திர ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000/-, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- என்ற வீதங்களில் ஒரு கல்வியாண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19.இன்படி முற்றிலும் தற்காலிகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்பிட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 3. பார்வை 2-இல் காணும் அரசாணையில், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாகவுள்ள 157 ஆசிரியர் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.8000/-, ரூ.9,000/- மற்றும் ரூ.10,000/- என்ற ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-இன்படி, முற்றிலும் தற்காலிகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்பிட பழங்குடியினர் வெளியிடப்பட்டுள்ளது. நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை

4. பார்வை 3 இல் காணும் அரசாணையில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள 830 ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்படும் இடைநிலை. ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/-, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- மாதத் தொகுப்பூதியமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-இன்படி, முற்றிலும் தற்காலிகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்பிட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

5. பார்வை 4-இல் காணும் அரசாணையில், தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.12,000/- மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.15,000/- மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000/-மதிப்பூதியம் (Honorarium) வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 6. பார்வை 5இல் காணும் கடிதத்தில், பழங்குடியினர் நல இயக்குநர் அவர்கள். பார்வை 4-இல் காணும் பள்ளிக் கல்வித்துறை அரசாணையில் வழங்கப்படுவதைப் போல் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 221 ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியிடங்கள் மற்றும் 2022-2023 ஆம் ஆண்டு காலியாக உள்ள 194 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000/- மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மற்றும் ஒரு முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000/- தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார். என

7. பார்வை 1 முதல் 3 வரை காணும் அரசாணைகளின் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிரப்பப்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பார்வை 4-இல் காணும் பள்ளிக் கல்வித்துறை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு. இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.12,000/- மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.15,000/- மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000/- என திருத்திய மதிப்பூதியம் (Honorarium) ஆணை வெளியிடப்படும் நாள் முதல் பார்வை 1 முதல் 3 வரையிலுள்ள அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.