TET conditions removed through Rule 110 - கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 28, 2023

TET conditions removed through Rule 110 - கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை.

கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை. TET conditions will be removed through Rule 110 on education grant application day - AIDED school teachers hope.

தமிழக அரசின் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர பணியிடத்தில் முறையாக ஒப்புதல் பெற்று, (அப்போதைய பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012. க்கு முன்பு) பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அதிமுக அரசிடம் பலமுறை எடுத்துச் சென்றோம். ஆனால் பயன் ஏதுமில்லை.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சிக் காலத்திய அரசாணைகளின் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரே காரணத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக TET லிருந்து விலக்கு அளிக்காமல் விட்டுவிட்டனர். மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் AIDED பள்ளி ஆசிரியர்கள் ஆட்சி விரைவில் மாற்றம் ஏற்படும், அப்போது நமக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆட்சிக்காக இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இன்று வரை தற்போதைய திமுக அரசும் எந்தவொரு தீர்வும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கொடுத்து உள்ளனர்.

எதிர்வரும் சட்டமன்றக் கூட்ட, கல்வி மானிய கோரிக்கை நாளன்று ஒரு நல்ல முடிவு வரும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணியிட அரசு , அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் குடும்பங்களின் 11 வருட கால வேண்டுகோளை ஏற்று விடியல் ஏற்படுத்தித் தர திமுக அரசால் மட்டுமே இயலும் என்று பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.