நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 فبراير 2023

நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பள்ளி கல்வித்துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தனியார் பள்ளிகளில் மட்டுமே முன்பெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால் அதை முறியடிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் மாணவர் , மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது. பல சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனார்கள். இந்த கலைநிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கிய உத்தரவு

இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளிக்கு வரமால் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பலர் இப்படி விடுமுறை எடுப்பது வழக்கம் ஆகி உள்ளது. பள்ளிகளுக்கு செல்லாமல் ஆசிரியர்கள் பலர் மெடிக்கல் லீவ் எடுக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். உடல் நிலையை காரணம் காட்டி பலர் லாங் லீவ் எடுப்பதும் வழக்கம் ஆகி உள்ளது.

புகார்

இந்த நிலையில்தான் இவர்களை பற்றி பள்ளி கல்வித்துறைக்கு அடிக்கடி புகார் சென்றுள்ளது. பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் சார்பாக அடிக்கடி இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆசிரியர்கள் அடிக்கடி லீவ் எடுக்கிறார்கள். இதனால் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. சிலபஸ் முடிக்கப்படாமல் இருக்கிறது. இந்த வருடம் தேர்வு வர போகிறது. ஆனால் இன்னும் சில பள்ளிகளில் சிலபஸ் முடிக்கப்படவில்லை. அதனால் விரைவில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. விடுமுறை

மெடிக்கல் லீவ் எடுத்தாலும், எடுக்கவில்லை என்றாலும் சம்பளம் வந்துவிடும் என்பதால் இப்படி பல ஆசியர்கள் லீவ் எடுக்கின்றனர். சிலர் அரசு பள்ளிகளில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் பள்ளிகளில் ஃபேகல்டியாகவும் பணியாற்ற தொடங்கி உள்ளனர். தனியார் பள்ளிகளில் கூடுதல் சம்பளத்திற்கு இவர்கள் சில பீரியட்களை எடுப்பார்கள். மற்ற நாட்களில் மட்டும் அரசு பள்ளிகளுக்கு வருவதை சில ஆசிரியர்கள் வழக்கமாக வைத்து உள்ளனர்.

உத்தரவு

இதையடுத்தே பள்ளிக்கு வரமால் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முக்கியமாக பள்ளிக்கு நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் லாங் லீவில் இருக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இப்படி லாங் லீவ் எடுக்கும் ஆசிரியர்களால்தான் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. இதையடுத்து அவர்களின் லிஸ்ட் வாங்கப்பட்டு உள்ளது. இந்த லிஸ்டை வைத்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஆசிரியர்கள் வருமானத்தில் குறைப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.