ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம்
ஆசிரியா்களின் நிலுவையில் உள்ள ஜனவரி ஊதியத்தை வழங்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் ச.மயில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ஜனவரி ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
70 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டாலும் 20 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மாநிலம் முழுவதும் பேராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.