ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 فبراير 2023

ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்?



ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்? Change in allotment of examination work for teachers?

'தங்கள் வசிப்பிடத்தில் இருந்து, 8 கி.மீ.,க்குள் பொதுத்தேர்வு பணி வழங்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 13ல் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச், 14ல் பிளஸ் 1 பொதுத் தேர்வும் துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை, நிலையான படை உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் நியமனம் நடந்து வருகிறது.

இந்த நியமனத்தில், ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து துாரம் கணக்கிட்டு, தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது.

இதற்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் விருப்பம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில், தேர்வு பணிக்கான மையம் ஒதுக்க வேண்டும் என, தேர்வுத்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே, ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியின் முகவரியை கணக்கிடாமல், அவர்களின் வசிப்பிட முகவரி அடிப்படையில் மட்டுமே, தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.