உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு NET Exam for Assistant Professor Job: Hall Ticket Release
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மார்ச் 10-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி 2-ம் கட்டமாக 5 பாடங்களின் தேர்வுகள் பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.