முறையான அனுமதி பெறாமல் செயல்படும் 162 தனியாா் பள்ளிகள்: ஆய்வில் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 فبراير 2023

முறையான அனுமதி பெறாமல் செயல்படும் 162 தனியாா் பள்ளிகள்: ஆய்வில் தகவல்



முறையான அனுமதி பெறாமல் செயல்படும் 162 தனியாா் பள்ளிகள்: ஆய்வில் தகவல்

தமிழகத்தில் முறையான அனுமதி பெறாமல் 162 தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருவது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய சுயநிதி பள்ளிகள் அனைத்தும் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் தடையில்லாச் சான்றிதழ் உள்பட சில அனுமதிகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும். எனினும், சில தனியாா் கல்வி நிறுவனங்கள் ஒரு பள்ளிக்கு மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு, அதன்மூலம் கிளை பள்ளிகளைத் திறந்து, அதில் மாணவா் சோ்க்கை மேற்கொண்டு வருவதாக தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு தொடா் புகாா்கள் வந்தன.

இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அதன் அடிப்படையில், தமிழகத்தில் 162 சுயநிதி பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கண்டயறிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியாா் பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிகளின் நிா்வாகங்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெறப்பட உள்ளது. அதன்பின், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், பெற்றோா்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சோ்க்கும்போது அவற்றுக்கு அங்கீகாரம் இருக்கிா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என்றனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.