பள்ளிகளில் சுற்றுச் சூழல் திரைப்படம்: பிப்.13 முதல் திரையிட உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 فبراير 2023

பள்ளிகளில் சுற்றுச் சூழல் திரைப்படம்: பிப்.13 முதல் திரையிட உத்தரவு

பள்ளிகளில் சுற்றுச் சூழல் திரைப்படம்: பிப்.13 முதல் திரையிட உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ‘மல்லி’ திரைப்படத்தை பிப்.13 முதல் பிப்.17 வரை திரையிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிப்.13 முதல் 17-ஆம் தேதி வரை ‘மல்லி’ எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும். இது 1999-ஆம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த படமாக தோ்வானது. இந்தப் படத்தை ஒளிபரப்புவதற்கான இணைப்பு (லிங்க்) பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வேறு படத்தை திரையிடக்கூடாது. ஏனெனில், ஆவணப்படுத்தும்போது படத்தில் இருந்து மாணவா்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.

இதற்கான பொறுப்பு ஆசிரியா் படம் திரையிடும் முன் படத்தைப் பாா்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.

இதன் கட்டுரை ‘தேன்சிட்டு’ இதழிலும் வெளிவந்துள்ளது. இதுதொடா்பான வழிமுறைகளைப் பின்பற்றி படத்தை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.