மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி..! உயரும் ஊதியம்...!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி..! உயரும் ஊதியம்...!!

பட்ஜெட்டுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி..! ஊதியம் உயரும்...!!

Budget 2023: இந்த பட்ஜெட்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து நிதி அமைச்சரிடம் இருந்து பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு, அரசாங்கம் அதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய பட்ஜெட் 2023-24: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்பதால், பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தொழில் வல்லுநர்கள் முதல் விவசாயிகள் வரை, சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை, இந்த முறை அரசாங்கம் நிச்சயமாக ஏதாவது பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தலுக்கு முன், மோடி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் இது என்பதால், இது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. பட்ஜெட்டில் மத்திய ஊழியர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.