தஞ்சாவூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 19 يناير 2023

தஞ்சாவூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.