அரசுப்பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திய 12ம் வகுப்பு மாணவன்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 19 يناير 2023

அரசுப்பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திய 12ம் வகுப்பு மாணவன்!

12th class student who stabbed the teacher of the government school!
ஆசிரியரை கத்தியால் குத்திய 12ம் வகுப்பு மாணவன்!

தில்லி அரசு பள்ளியில் நடைமுறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கையில் மாணவன் ஒருவன், ஆசிரியரை கத்தியால் பல முறை குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தில்லி இந்தர்புரி பகுதியில் நடந்தேறியுள்ளது.

நடைமுறைத் தேர்வை கண்காணிக்க பள்ளிக்கு வந்த ஆசிரியர் பூதேவை கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார் அந்த மாணவன். இதனால் ஆசிரியர் பூதேவ் நிலை குறைந்ததையடுத்து, காயமடைந்த ஆசிரியரை அருகில் உள்ள பிஎல்கே கபூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.