சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.1.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 9, 2023

சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.1.2023


சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் சுகாதாரத் துறையில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணி இடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Auxiliary Nurse Midwife
காலியிடங்கள்: 183
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருந்தாளுனர் பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Lab Technician
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: X - Ray Technician
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: இரண்டு ஆண்டு எக்ஸ்-ரே டெக்னீசியன் படிப்புபடிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: Operation Theatre Assistant
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.8,400
தகுதி: ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி டிப்ளமோ அறுவை சிகிச்சை டெக்னாலஜி பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Ophthalmic Assistant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: கண் மருத்துவ உதவியாளர் படிப்பில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு பணிக்கு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai - 600003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.1.2023


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.