01.03.2022 அன்றைய நிலையிலான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 يناير 2023

01.03.2022 அன்றைய நிலையிலான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் சார்பு

ஆதிதிராவிடர் நலம் கல்வி - மேல்நிலைப்பள்ளிகள் - 01.03.2022 அன்றைய நிலையிலான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் சார்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் 50 % பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் 50 % பணியிடங்கள் இத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் மற்றும் அவர்தம் நிலையில் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/காப்பாளனி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களையும், மூன்றாண்டு பதவி துறப்பு செய்து முடிவுற்ற நபர்களின் பெயர்களையும் சேர்த்து மார்ச் 1 ந்தேதியினை தீர்வு நாளாக (Crucial Date) கொண்டு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி அடிப்படையில் 01.03.2022 அன்றைய நிலையில் பணி மூப்பின் அடிப்படையில் பாடவாரியாக முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க தகுதி உடைய ஆசிரியர்களின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எவரது பெயரும் விடுபடாமல் அனைத்து விவரங்களையும் தனியர்களது கல்விச் சான்று நகல்களுடன் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கும்படியும் மற்றும் பதவி உயர்வு துறப்பு செய்பவர்கள் குறித்த விவரத்தினை தவறாமல் உரிய படிவத்தில் அனுப்பி வைக்கும்படியும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பட்டதாரி ஆசிரியர்களாக நேரடி நியமனம் மூலம் (TRB) தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதனால் அவர்களது ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணை (தர எண்ணுடன்) நகலுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களது பணி இன்றியமையாதது என்பதால் இக்காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்பிடும் வகையில் கீழ்க்கண்ட தேதிகள் வரை பணிவரன்முறை செய்யப்பட்ட ஒரே பாடப்பரிவை சேர்ந்த (Same Major Only) பட்டதாரி/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் உள்ளவாறு பூர்த்தி செய்து பணி சார்ந்த விவர முன்மொழிவுகளை பணிப்பதிவேட்டுடன் விரைவில் 31.01.2023-க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.