ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் சேர JEE நுழைவு தேர்வு கட்டணம் கடும் உயர்வு: 501 மையங்கள் 102ஆக குறைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் சேர JEE நுழைவு தேர்வு கட்டணம் கடும் உயர்வு: 501 மையங்கள் 102ஆக குறைப்பு

ஜேஇகி நுழைவு தேர்வுக்கு 2023ம் ஆண்டுக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய மையங்களின் எண்ணிக்கை 501ல் இருந்து 102 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பொறி யியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால், ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது வரும் ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒருவாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்து வரும் நிலையில, வரும் 12ம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே தேசிய தேர்வு முகமை நுழைவு தேர்வுக்கான 5 கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், 'ஜே.இ.இ மெயின் தேர்வானது கடந்த 2022ம் ஆண்டில் 13 வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்றது. ஆனால் அடுத்தாண்டு (2023) 24 வெளிநாட்டு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். அந்த பட்டியலில் முதன் முறையாக சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த தேர்வு நடைபெறும். மற்றபடி ஏற்கனவே பட்டியலில் இருந்த பஹ்ரைன், இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், ஓமன், சவுதி அரேபியா, சிங்கப்பூர்,குவைத், சிங்கப்பூர், குவைத், மலேசியா. நைஜீரியா, இந்தோனேசியா, ஆஸ் 5 திரியா, பிரேசில், கனடா, ஹாங்காங், மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஜேஇ மெயின் தேர்வு நடைபெறும்.

கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு கட்டணம் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2023ம் ஆண்டில் ஏதேனும் ஒரு தாள் (பி.இ பி.டெக் பி.ஆர்க் பி.பிளானிங்) எழுதும் பொது இ.டபிள்யூ.எஸ் ஓ.பி.சி பிரிவை சேர்ந்த இந்திய மாணவர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதே 2022ம் ஆண்டில் நிர்ணயக்கப்பட்ட கட்டணம் ரூ.650 ஆக இருந்தது. மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள தேர்வர்கள் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதே 2022ம் ஆண்டில் நடந்த தேர்வின் போது, அவர்களுக்கான கட்டணம் ரூ.3,000 ஆக இருந்தது.

2023ம் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று தாள்களை எழுதும் பொது பொருளாதாரத்தில் நலிவுற்றோர் ஓபிசி பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் 2022ம் ஆண்டில் ரூ.1,300 கட்டணம் செலுத்தினர்.

2023ல் இந்தியாவில் 399 மையங்களிலும், அதே தேர்வு 2022ம் ஆண்டில் 501 மையங்களிலும் நடைபெறும். 2023ம் ஆண்டுக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கை 102 என்ற அளவில் தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் மையங்களில் எண்ணிக்கையை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.