இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்

*சம வேலைக்கு சம ஊதியம்" வேண்டி நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து-தமிழக முதல்வர் அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னையில் டிசம்பர் 27ஆம் தேதி முதல், பேராசிரியர் அன்பழகனார் கல்வி வசாகத்தில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. 2009 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 13 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படாமல், ஒரே வேலைக்கு மாறுபட்ட ஊதியம் வழங்கி சுமார் 20000 இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த கால ஆட்சியில் இவர்கள் இதே வளாகத்தில் இக்கோரிக்கைக்ககாக போராடிய பொழுது முன்னாள் ஆட்சியாளர்களால் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட நிகழ்வு நடந்தேறியது. கடந்த கால போராட்டத்தின் பொழுது இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் போராட்ட களத்திற்கே வந்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் தனது தலைமையிலான தி மு கழக தேர்தல் வாக்குறுதியில் 311 வது தேர்தல் வாக்குறுதியாக மாறுபட்ட ஊதியம் பெறும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தனது வாக்குறுதியும் அளித்துள்ளார்.மேலும் பல்வேறு தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறி, "நான் கலைஞர் மகன், சொன்னதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன்" என் மேடைதோறும் கூறி நம்பிக்கை அளித்தார். அதனடிப்படையிலும், செப்டம்பர் 2022 ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான் வழங்கிய தேர்தல் வாக்குறுநியை நான் ஒருபோதம் மறுக்கவில்லை மறக்கவில்லை மறைக்கவில்லை, கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறியதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து, உடனடியாக கல்வி அமைச்சர் அவர்களை போரட்டக் காத்திற்கு அனுப்பி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்

போராட்டக்களத்தில் தனது குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியை மிகச் சிறப்பாக போதிக்கும் இடைநிலை ஆசிரியர்களிடையே காணப்படும் ஊதிய முரண்பாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் எனும் நிலையை தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது

போராட்டத்தில் பங்கேற்றுள்ள தங்களின் நியாயமான போராட்டம் வெல்லும். வெல்லும், வெல்லும்.

அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்றும் துணை நிற்கும் என போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து போராட்டம் வெற்றியடைய நெஞ்சார வாழ்த்துகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.