இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை - Statement by the State Secretary of the Primary School Teachers' Alliance to the struggle of secondary teachers - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 30 ديسمبر 2022

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை - Statement by the State Secretary of the Primary School Teachers' Alliance to the struggle of secondary teachers

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை - Statement by the State Secretary of the Primary School Teachers' Alliance to the struggle of secondary teachers

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் நம் இடைநிலை ஆசிரியர் சொந்தங்களுக்கு ஆதரவு தெரிவித்து நம் TAAK மாநிலப் பொதுச் செயலாளர் அவர்கள் அறிக்கை.

அரசு உடன் அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை.

பத்திரிக்கை மற்றும் ஊடகச் செய்தி

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் அறிக்கை:

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

“சம வேலைக்கு சம ஊதியம்" என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி முதல், இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும், இந்த ஊதிய பாகுபாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ - ஜியோவில் கூட இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் கனிவோடு பரிசீலித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமாய், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.