இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் ஆதரவு - General Secretary of Primary School Teachers' Association supports secondary teachers' protest - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 30 ديسمبر 2022

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் ஆதரவு - General Secretary of Primary School Teachers' Association supports secondary teachers' protest

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் ஆதரவு - General Secretary of Primary School Teachers' Association supports secondary teachers' protest

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2009 க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களை போல சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும் என நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக வாழ்த்துகிறோம்.

18.12.2022 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என முதல் கோரிக்கையாக வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே பணி - ஒரே பதவி - ஒரே கல்வி தகுதி என அனைத்தும் சமமாக உள்ள நிலையில், இணையான உடன் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு சக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை வைத்து வருகிறது.

தமிழ்நாடு கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க வழங்கிய தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 311 ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்குவோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அழைத்து பேசி அவருடைய கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கேட்டுக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.