அனைத்துவகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு - நாளை 23.12.2022 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - TNSED parents app ல் login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 22, 2022

அனைத்துவகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு - நாளை 23.12.2022 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - TNSED parents app ல் login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்கள்

அனைத்துவகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு :

நாளை 23.12.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை TNSED parents app ல் login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்கள்:

1.முன்திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

2. சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தகவல் பெறுதல் வேண்டும்.

3. நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.

5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

6. 1324 அரசு பள்ளிகளும் நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை(School Development Plan )பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.

8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட பள்ளிகளுக்கு பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் ( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் ) தாங்கள் நிதி உதவி கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

9. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.