நாளை 17.11.22 - அனைத்துப் பள்ளிகளில் 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்வு நடைபெற வேண்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 16, 2022

நாளை 17.11.22 - அனைத்துப் பள்ளிகளில் 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்வு நடைபெற வேண்டும்



தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

ந.க.எண்.10/மாகுஉக/ஒபக/2022 நாள்:14 .11.2022,

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தருமபுரி மாவட்டம் - மாற்றுத்திறன் கோண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் - மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் - கலைப்பண்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் - வட்டார வளமையங்களுக்கு தொகை விடுவித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

பார்வை: மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்.4600/ஆ8/1ED/ஒபக/2022, நாள்.08.11.2022.

1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தருமபுரி மாவட்டம், பார்வையில் கண்டுள்ள மாநிலத்திட்ட இயக்குநரின் கடிதத்தின்படி தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையானது குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், ‘எண்ணும் எழுத்தும்”, “இல்லம் தேடிக் கல்வி” மற்றும் “நான் முதல்வன்" போன்ற சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் உள்ளடங்கிய சுல்வித்திட்டம் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கான தனிநபர் திட்டம் (IEP) மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும் அவர்களின் முன்னேற்றத்தினைவும், பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கல்வி அனைத்து குழந்தைகளுக்கான உரிமை, ஆகவே எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக அனைத்து வட்டார வளமையங்களில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து முறையான பள்ளியில் சேர்த்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வையும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும்படிபாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 3ம் தேதி உலக “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 14ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்

1. உறுதி மொழி எடுத்தல்

2. விழிப்புணர்வு பேரணி

3. “ இணைவோம் மகிழ்வோம்” பள்ளி அளவிலான நிகழ்ச்சிகள்

4. ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள்

5. ஒருங்கிணைந்த கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்

6. சிறார் திரைப்படங்கள்

7. சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து

நிகழ்ச்சியின் விவரம்

உறுதி மொழி எடுத்தல்

விழிப்புணர்வின் துவக்க நிகழ்ச்சியாக நவம்பர் 14ம் தேதி உறுதி மொழி எடுத்தல் இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், சட்டப்போவை. நாடளுமன்ற உறுப்பினர்கள்.எழுத்தாளர்கள். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள். சாதனையாளர்கள் போன்றோரை வரலைத்து உறுதிமொழியனை ஏற்று மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும் ‘சுல்வி அனைத்து குழந்தைகளுக்கான உரிமை' என்பதாலும், அக்கல்வியினை அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்நிகழ்வு நடைபெறுவதையும். நவம்பர் 14ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டத்தில் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.