நில அளவா், வரைவாளா் பணி:தோ்வு நுழைவுச் சீட்டுகள் தயாா் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

நில அளவா், வரைவாளா் பணி:தோ்வு நுழைவுச் சீட்டுகள் தயாா்

நில அளவா், வரைவாளா் பணி:தோ்வு நுழைவுச் சீட்டுகள் தயாா்

நிலஅளவா், வரைவாளா் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தயாா் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வாணைய கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாா்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவா், வரைவாளா், தமிழ்நாடு நகா் ஊரமைப்புத் துறையில் அளவா் மற்றும் உதவி வரைவாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29-இல் வெளியிடப்பட்டது. எழுத்துத் தோ்வு நவ. 6-இல் நடைபெறுகிறது.

தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தோ்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.