அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் கூடுதல் இடங்களை ஒதுக்கக்கோரி கல்லூரி நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஒதுக்கி உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% இடங்களும், தனியார் கல்லூரிகளில் 10% இடங்களும் கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் மாணவர் சேர்க்கை காரணமாக, கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரக்கூடாது, பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெற்று சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.