TNPSC Group 4 Cut Off: VAO தேர்வு கட் ஆஃப், முந்தைய ஆண்டுகளை விட குறையுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 27, 2022

TNPSC Group 4 Cut Off: VAO தேர்வு கட் ஆஃப், முந்தைய ஆண்டுகளை விட குறையுமா?

TNPSC Group 4 Exam 2022 cut off mark analysis here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? கூடுமா? குறையுமா? என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வின் தரம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தேர்வுகளைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு வினாக்கள் கேட்கப்படும் முறையில் நிறைய மாற்றங்கள் இருந்தது. முந்தைய தேர்வுகளில் நேரடியாக வினாக்கள் கேட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேர்வில் வினா மற்றும் விடைகளை படித்து புரிந்துக் கொண்ட பின்னரே பதில் அளிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

தமிழ் பகுதி வினாக்கள் எப்போதும் போல் கேட்கப்பட்ட நிலையில், பொது அறிவு மற்றும் கணித பகுதி வினாக்கள் தேர்வர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையை நன்கு புரிந்து படித்தவர்களால் மட்டுமே விடையளிக்க முடியும் வகையில் இருந்தது, என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் ஆனது, முந்தைய ஆண்டுகளை விட குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த குரூப் 4 தேர்வு எளிமையாக இருந்தது. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை தேர்வில் விடையளிப்பதில் தேர்வர்களுக்கு சற்று தடுமாற்றம் இருந்தது. எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம்.

இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.