இடைநில்லா கல்வி இலக்கை நோக்கி பயணிப்போம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 12 يونيو 2022

இடைநில்லா கல்வி இலக்கை நோக்கி பயணிப்போம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இடைநில்லா கல்வி

என்ற இலக்கை நோக்கி பயணிப் போம் என பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலி யுறுத்தினார். குழந் தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத் தையொட்டி, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதி தாகப் பிறக்கும் கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் செயல் பட அரசு பல்வேறு பொருள் களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. கூவும் குயில்க ளாகவும், ஆடும் மயில்களாகவும் கல்வி வானில் சிறகடிக்கும் சுதந் திரப் பறவைகளாக மாணவர் கள் இருக்கின்றனர்.

அவர்களது குழந்தைப் பருவம்அவர்களுக்கே என்பதை உறுதி செய்திடும் வகையில், குழந்தைத் தொழிலா ளர் முறையை முற்றிலும் அகற் றிட வேண்டும். நமது சிறந்த கல்வி முறையை பயன்படுத்தி ஒளிமய மான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தை கள் அனைவரும் பள் ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கிறேன்.

பள்ளி செல்லும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்களை பெற் றோர் பெருமைப்படுத்த வேண் டும். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எந்தச் சூழ் நிலையிலும் குழந்தைகளை பணிக்கு அமர்த்த மாட்டோம் என உறுதிகூறிட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க இடைநில்லாக் கல்வி, தடையில்லாத வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என அதில் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.