கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு - பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசுக்கு வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 12 يونيو 2022

கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு - பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசுக்கு வலியுறுத்தல்

கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரு வதை தொடர்ந்து பள்ளி கள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம்லீக்வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:

கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப் புக்கு வரை பயிலும் மாண வர்களுக்கு வரும் 13ம் தேதி(நாளை) முதல் பள் ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று என்பது அதிக ரித்து வருகிறது. அதில் பெரும்பாலும், கல்லூரிக ளில் பயிலும் மாணவர் கள் அதிக எண்ணிக்கை யில் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக

உயர்ந்துள்ளது. அதுமட்டு மின்றி,மே 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிந்து 10 நாட்களுக்கு மேலாக ஆகி யிருந்தாலும், சென்னை உள்பட பல மாவட்டங்க ளில்கோடை வெப்பத்தின் தாக்கம் என்பது சதம் அடிப் பதை தவறுவதில்லை. ஏற்கனவே கொரோனா தொற்று உயர்ந்து வருவது ஒரு புறம் மற்றொரு புறம் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு என பள்ளி மாணவர்களுக்கு இன்னலையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே கொரோனா அச்சுறுத்தல், கோடை வெப்பம் ஆகிய வற்றில் இருந்து பள்ளி மாணவர்களை காக்கும் பொருட்டு நாளை மறு நாள் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத் தில் கொரோனா தொற்று அதிகமாகவுள்ள மாவட் டங்களிலாவது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.